ADDED : நவ 05, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி இறந்தார்.
வளவனுார் அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன், 52; விவசாயி. இவர், நேற்று மாலை தனது வீட்டிலிருந்து விவசாய நிலப்பகுதிக்கு சென்றார். அப்போது, இயற்கை உபாதை கழித்து விட்டு, தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
வளவனுார் போலீசார் பொன்னையன் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

