/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., நர்சிங் கல்லுாரி 12வது பட்டமளிப்பு விழா
/
இ.எஸ்., நர்சிங் கல்லுாரி 12வது பட்டமளிப்பு விழா
ADDED : நவ 27, 2025 04:53 AM

விழுப்புரம்: விழுப்புரம் இ.எஸ்., நர்சிங் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அறக்கட்டளை உறுப்பினர் விக்ரம் அரிகரன் தலைமை தாங்கி, செவிலியர்களின் முக்கியத்துவம் பற்றி கூறினார். தொடர்ந்து அவர், மனிதநேயத்தோடும்,பரிவோடும் பொதுமக்களுக்கு இன்று பட்டம் பெறும் செவிலியர்கள் சேவை செய்ய வேணடும். ஏ.ஐ., முன்னேற்றம் செவிலியர்கள் துறையில் உள்ள மனிதநேய உயர்வை எந்த காலத்திலும் மாற்ற முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து, சி.எம்.சி., முதல்வர் சாண்ட்ரிலா ஞானதீபம், வெளிநாடு செல்லும் செவிலியர்கள் தங்களின் பெற்றோர்களை மறக்காமல் அவர்களுக்கு சிறந்த சேவையை வாழ்நாள் முழுவதும் தர வேண்டும். உங்களின் திறமையை ஓய்விலும் துருப்பிடிக்க விட்டுவிடாமல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக, கல்லுாரி முதல்வர் பொற்செல்வி வரவேற்று, 2024-25ம் ஆண்டு அறிக்கையை வாசித்தார். இ.எஸ்., கல்விகுழுமம் இயக்குனர் முரளிதரன், செவிலியர்கள் தங்கள் சேவையில் கொரோனா காலத்தில் செய்த தியாக உள்ளம் பெரும்பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில், 97 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இதில், சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட் டது.

