ADDED : ஆக 23, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், நேற்று காலை விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கைவல்லியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு 'திடீர்' சோதனை நடத்தினர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த பழனியப்பன் மகன் கோபிநாத்தை, 49; போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 5 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.