/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
செஞ்சியில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : செப் 07, 2025 05:18 AM
செஞ்சி: செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் வரும் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்தும், வரும், 17ம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது குறித்தும், ஓட்டுச்சாவடி முகவர்கள் சரிபார்த்தலுக்காகவும் நாளை 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு, செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமைல் நடக்க உள்ளது.
தொகுதி மேற்பார்வையாளர்கள் செஞ்சி கார்த்திகேயன், மயிலம் புகழேந்தி, திண்டிவனம் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மண்டல பொறுப்பாளர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.
மாநில, மாவட்ட, நிர்வாகிகள்,பொதுக்குழு, செயற்குழு, உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதி,நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.