/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்பு கூட்டம் ரத்து மனுக்கள் பெற பெட்டி வைப்பு
/
குறைகேட்பு கூட்டம் ரத்து மனுக்கள் பெற பெட்டி வைப்பு
குறைகேட்பு கூட்டம் ரத்து மனுக்கள் பெற பெட்டி வைப்பு
குறைகேட்பு கூட்டம் ரத்து மனுக்கள் பெற பெட்டி வைப்பு
ADDED : மார் 19, 2024 05:47 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் குறைகேட்புக் கூட்டம் ரத்தானதால், பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைகேட்புக் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில், மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது.
இந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டுச் சென்றனர். தேர்தல் நடத்தை விதிகள் உள்ளவரை, பொதுமக்கள் இந்த மனு பெட்டியில் தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அளித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.