/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மாவட்ட நுாலகத்திற்கு வழங்கல்
/
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மாவட்ட நுாலகத்திற்கு வழங்கல்
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மாவட்ட நுாலகத்திற்கு வழங்கல்
போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் மாவட்ட நுாலகத்திற்கு வழங்கல்
ADDED : ஏப் 25, 2025 05:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நுாலகத்திற்கு, போட்டி தேர்விற்கு பயிலும் மாணவர்களுக்காக புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட மைய நுாலகம் மற்றும் கீழ்பெரும்பாக்கம் அறிவுசார் மையத்திற்கு, அரசு போட்டி தேர்வுக்காக பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, பல்வேறு புத்தகங்களை, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேற்று வழங்கினார்.
அப்போது அவர் கூறுகை யில், 'மாவட்ட மைய நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை, கடந்த மாதம் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினேன். அப்போது, அரசு போட்டி தேர்விற்கு கூடுதல் புத்தகங்கள் வேண்டும் என அவர்கள் கேட்டனர்.
உடனடியாக, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மாவட்ட மைய நுாலகத்திற்கு 77 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் அறிவுசார் மையத்திற்கு 36 ஆயிரத்து 328 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) காசீம், மைய நுாலகர் இளஞ்செழியன் பங்கேற்றனர்.

