/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல் ஒலக்கூரில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
/
மேல் ஒலக்கூரில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : நவ 05, 2025 10:54 PM

செஞ்சி: மேல் ஒலக்கூரில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
வல்லம் ஒன்றியம் மேல்ஒலக்கூர் கிராமத்தில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மயிலம் பி.டி.ஓ., சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மாலா சிவக்குமார் வரவேற்றார்.
தி.மு.க., மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, முதல் இடம்.பிடித்த தெள்ளார் பீமாராவ் அணிக்கு 10,000 ரூபாய் ரொக்க பரிசும், கேடயமும், 2ம் இடம் பிடித்த மேல் ஒலக்கூர் சில்வர் ஸ்டார் அணிக்கு 5000 ரூபாய் ரொக்க பணம், கேடயமும், 3ம் இடம் பிடித்த மேல் ஒலக்கூர் கிங்ஸ்டார் அணிக்கு 3000 ரூபாய் பணமும், கேடயமும், 4ம் இடம் பிடித்த நெகனூர் அணிக்கு 2000 ரூபாய் பணம், கேடயமும் மற்றும் ஆட்ட நாயகர்களுக்கு பரிசு வழங்கினார். தொடர் நாயகன் பரிசை தொழிலதிபர் புஷ்பராஜ் வழங்கினார்.
இதில் சென்னை மாரி பிரகாஷ், முருகன், மதியழகன், பாலா, ஸ்ரீகாந்த், லோகு பெலகுப்பம் ஊராட்சி தலைவர் பூங்கா பாக்யராஜ், வழக்கறிஞர் காளிதாஸ், குமார், கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

