/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
/
ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : ஆக 24, 2025 03:30 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டின் பி.எட்., எம்.எட்., மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார்.
இயக்குநர் சாந்தி பூபதி முன்னிலை வகித்தார். கல்லுாரி சி.இ.ஓ., மணிகண்டன் வரவேற்றார்.
எம்.எட்., முதல்வர் கோவிந்தராஜ், பி.எட்., முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார், சுப்ரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பேராசிரியர்கள் பார்வதி, செல்வி, இளையராஜா, சுகுமார், நிர்மலா, ஆதிலட்சுமி, திலகம், பிருந்தா மற்றும் மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.