/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காவேரி கூக்குரல் இயக்கம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
/
காவேரி கூக்குரல் இயக்கம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
காவேரி கூக்குரல் இயக்கம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
காவேரி கூக்குரல் இயக்கம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ADDED : செப் 18, 2024 11:16 PM

வானுார்,: சின்ன கொழுவாரி கிராமத்தில், தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மரங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த மரம் தங்கசாமி 'வாழ்வோம் மரங்களுடன்' என்ற தாரக மந்திரத்துடன் டிசம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தினர்.
விவசாயிகளின் வறுமையை போக்க மரங்கள் சாகுபடியே சரியான தீர்வு என்பதை உணர்ந்து தன் வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தவர். அவர் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல்புரிந்தவர்.
அவரின் சேவையை நினைவு கூறும் வகையில், அவரின் நினைவு நாளில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக வானூர் அடுத்த சின்ன கொழுவாரி கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கழுப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பந்தம், மரக்கன்று நடும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வானூர் ஒன்றிய உதவி பொறியாளர் குகன், சமூக ஆர்வலர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

