/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
/
அதிவேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
ADDED : நவ 27, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம்: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் போலீசார் பழைய பட்டணம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர் கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முகேஷ், 20; என்பது தெரிய வந்தது.
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர்.

