/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூர்யா கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
சூர்யா கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : ஆக 24, 2025 10:03 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா கல்வி குழும சேர்மன் கவுதம சிகாமணி பிறந்த நாளை முன்னிட்டு கல்லுாரி மாணவர்கள், வட்டார அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயா தலைமையில் டாக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் மருத்துவ குழுவினர், 150 மாணவர்களிடமிருந்து ரத்த தானம் பெற்றனர்.
கல்லுாரி முதல்வர்கள் சங்கர், அன்பழகன், பாலாஜி, வெங்கடேஷ், துணை முதல்வர் ஜெகன், கில் பட்ராஜ், தொடர்பு அலுவலர் சந்துரு குமார், என்.எஸ்.எஸ்., திட்டஅலுவலர் பிரபு, உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.