/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ.,வின் கூட்டத்தை குறைக்க திட்டம் கட்சியினர் உஷாராக இருக்க எச்சரிக்கை
/
பா.ஜ.,வின் கூட்டத்தை குறைக்க திட்டம் கட்சியினர் உஷாராக இருக்க எச்சரிக்கை
பா.ஜ.,வின் கூட்டத்தை குறைக்க திட்டம் கட்சியினர் உஷாராக இருக்க எச்சரிக்கை
பா.ஜ.,வின் கூட்டத்தை குறைக்க திட்டம் கட்சியினர் உஷாராக இருக்க எச்சரிக்கை
ADDED : பிப் 09, 2024 06:08 AM
விழுப்புரம்: தி.மு.க.,வினரின் மறைமுக திட்டத்தை முறியடிக்க பா.ஜ.,வினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் 27ம் தேதி, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, விழுப்புரம் நகரில், 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை நடத்தினார். இந்நிகழ்ச்சியின்போது, ஒரு சில பெண்களிடம் இருந்து நகைகள் மற்றும் 3000 ரூபாய் திருடு போனதாக தகவல் பரவியது.
இந்நிலையில், பா.ஜ., நிகழ்ச்சியை சீர்குலைக்க ஆளுங்கட்சியினர் திட்டமிட்ட செயல்களில் ஈடுபடுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தெரிவித்துள்ளார்.
அவர், கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'உஷார், உஷார் பா.ஜ., நிர்வாகிகளே உஷார்! தி.மு.க.,வினரின் துாண்டுதலால், மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம், குண்டர்களை வைத்து பா.ஜ., நிர்வாகிகளிடமிருந்து பணத்தைப் பறிப்பது. பெண்களுடைய நகையை திருடுவது என திட்டமிட்டுள்ளது.
அதன் மூலம் பா.ஜ.,விற்கு திரளும் மக்கள் கூட்டத்தை குறைக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில், பா.ஜ., நிர்வாகிகளை ஒருங்கிணைக்க விடாமல் யாரோ ஒரு சிலர் மூலமாக தடுத்து வருகின்றனர். அதற்கு பா.ஜ., நிர்வாகிகளுக்கு யாரோ ஒரு சிலர் மூலமாக பணத்தைக் கொடுத்து ஒருங்கிணைப்பை தடுத்து விடலாம்.
குறிப்பாக திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருவதால், இதுபோன்ற நடவடிக்கைகளை தி.மு.க., தரப்பில் கையாண்டு வருகின்றனர். பா.ஜ., நிர்வாகிகள் ஏமாந்து விடக்கூடாது. இந்த தேர்தலை துணிச்சலாக சந்திப்பதற்கு பா.ஜ., நிர்வாகிகள் உஷாராக இருக்க வேண்டும்' என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

