/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
/
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 20, 2024 05:15 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்க உள்ள அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, விழுப்புரம், எல்லிஸ்சத்திரம் சாலையில் தமிழக முதல்வர், பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், அரசு அலுவலர்களின் வாகனம் நிறுத்துவதற்கு இடங்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை, கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விழா மேடை அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் செல்வகுமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரேமி உடனிருந்தனர்.