ADDED : ஏப் 09, 2025 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அவலுார்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் வித்யா தலைமை தாங்கினார். செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி புனிதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மழலையர்களுக்கு பட்டமும், சிறந்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கினார். விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் ரவி, மாருதி, ரம்யா மற்றும் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

