ADDED : பிப் 29, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி கூட்டம் நடந்தது.
டாக்டர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மனோபவன், பழங்குடியின மக்களுக்கு கால்நடை வளர்ப்பு பற்றி கூறினார். விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன் பழங்குடியின மக்களுக்கான திட்டம் பற்றி விளக்கினார். பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சிவபெருமான், சமுக ஆர்வலர் பிரசாந்த், பழங்குடி காட்டு நாயக்கன் சங்க பொருப்பாளர் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். பழங்குடி மக்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான ஆடு, மாடு, கோழிகளுக்கு தேவையான உணவு தானியங்கள் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

