/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தவறவிட்ட இரண்டு சவரன் நகை பெண்ணிடம் ஒப்படைத்த வாலிபர்
/
தவறவிட்ட இரண்டு சவரன் நகை பெண்ணிடம் ஒப்படைத்த வாலிபர்
தவறவிட்ட இரண்டு சவரன் நகை பெண்ணிடம் ஒப்படைத்த வாலிபர்
தவறவிட்ட இரண்டு சவரன் நகை பெண்ணிடம் ஒப்படைத்த வாலிபர்
ADDED : ஆக 26, 2025 11:51 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் கடையில் 2 சவரன் நகையை தவறவிட்ட பெண்ணிடம் அதை ஒப்படைத்த வாலிபரை போலீசார் பாராட்டினர்.
விழுப்புரம், என்.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் தனசேகர் மகன் தயா, 37; இவர், புதிய பஸ் நிலையம் எதிரே ஆவின் பாலகம் வைத்துள்ளார்.
அந்த கடையில், நேற்று மதியம் 1:30 மணிக்கு சித்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி முத்தமிழ் டீ குடித்தார்.
அப்போது, கடையில் அவருடைய மணிபர்சை வைத்து விட்டு சென்று விட்டார். கடை உரிமையாளர் அந்த மணிபர்சை திறந்து பார்த்த போது, அதில் 2 சவரன் நெக்லஸ் இருந்தது.
அவர், விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் அந்த நகையை ஒப்படைத்தார். பின், கடைக்கு நகையை தேடி வந்த பெண், போலீஸ் நிலையத்தில் நகையை ஒப்படைத்த தகவல் அறிந்து அங்கு சென்றார்.
தொடர்ந்து அங்கு, போலீசார் முன்னிலையில் தயா நகையை முத்தமிழிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் தயாவை வெகுவாக பாராட்டினர்.