/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்புச் சுவர் வழியாக அத்துமீறும் வாகனங்கள்; திண்டிவனத்தில் விபத்து அபாயம்
/
தடுப்புச் சுவர் வழியாக அத்துமீறும் வாகனங்கள்; திண்டிவனத்தில் விபத்து அபாயம்
தடுப்புச் சுவர் வழியாக அத்துமீறும் வாகனங்கள்; திண்டிவனத்தில் விபத்து அபாயம்
தடுப்புச் சுவர் வழியாக அத்துமீறும் வாகனங்கள்; திண்டிவனத்தில் விபத்து அபாயம்
ADDED : மார் 27, 2024 07:38 AM

திண்டிவனம்: திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் தடுப்புச் சுவர் பகுதி வழியாக வாகனங்கள் கடப்பதைத் தடுக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில்தொலை துாரங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்கின்றன. இதில் விழுப்புரம் செல்லும் சாலையின் (மயிலம் ரோடு) நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் டவுன் போலீஸ் நிலையத்திலிருந்து ஜக்காம்பேட்டை அருகே நகாரட்சி எல்லை வரை நான்கு இடங்களில் தடுப்புச் சுவர் வழியாக லாரி, ஆட்டோக்கள் செல்லும் வகையில் குறுக்கே வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
பொது மக்கள் நலன் கருதி திறந்துள்ள வழிகளை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கடந்த 11ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்து வெளியானது.
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற உடன், திறந்துள்ள தடுப்புச் சுவர் பகுதியில் பெயரளவில் டிரம்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வைத்தனர்.
இந்த டிரம்களை வாகன ஓட்டிகள் எடுத்து ஓரமாக வைத்து விட்டு அதே வழியில் வாகனங்களை போக்குவரத்து விதிகளை மீறி விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தடுப்புச் சுவர் பகுதியை வாகனங்கள் கடக்காத வகையில் நிரந்தரமாக சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

