/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீட் மாதிரி தேர்வில் சாதித்த மாணவர்கள்
/
நீட் மாதிரி தேர்வில் சாதித்த மாணவர்கள்
ADDED : ஏப் 29, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் 'தினமலர்' சார்பில் நேற்று நடந்த 'நீட்' மாதிரி நீட் தேர்வுக்கு, 421 பேர் பதிவு செய்திருந்தனர். 329 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், அகரம்சித்தாமூர் மாணவி திவ்யா 720 மதிப்பெண்ணுக்கு 535 மதிப்பெண் எடுத்து முதலிடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து, விழுப்புரம் வழுதரெட்டி மாணவி சமீதா 420, விழுப்புரம், வெள்ளையம்பட்டு மாணவி ஸ்ரீதேவி 400, சின்னபாபுசமுத்திரம் மாணவி அனிஷா 395, விழுப்புரம், சுதாகர் நகர் சஞ்சய் 362 மதிப்பெண் எடுத்து முறையே 2 முதல் 5ம் இடம் வரை பிடித்துள்ளனர்.

