/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் தொடர் சொற்பொழிவு
/
இ.எஸ்., பொறியியல் கல்லுாரியில் தொடர் சொற்பொழிவு
ADDED : ஏப் 15, 2024 05:24 AM

விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் சர்வதேச தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். முதல்வர் இந்திரா வரவேற்றார். துணை முதல்வர் ஆண்ட்ரூஸ் முன்னிலை வகித்தார். ஜெர்மனியைச் சேர்ந்த மூத்த நிபுணர் பெர்ன்ஹார்ட் க்ளூக், 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பு' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், துறை தலைவர்கள் சந்திரலேகா, கார்த்திகேயன், செல்வம் உட்பட துறை ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மின்னணுவியல் தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.

