/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுங்க கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டியில் ம.ம.க.,வினர் முற்றுகை

ADDED : செப் 17, 2024 04:06 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி யில் தமிழக டோல் பிளாசாக்களில் கட்டண உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி டோல் பிளாசா வில் நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் முஸ்தாக்தீன் தலைமை தாங்கி டோல் ப்ளாசாவில் உள்ள அனைத்து லேன்களை சுங்கவரி இன்றி வாகனங்களை அனுமதிக்க கூறி முற்றுகையிட்டனர். அவர்களை டி.எஸ்.பி., நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் லேன்களை விட்டு அப்புற படுத்தினார்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் லேசான தள்ளுமுள்ளு நடந்தது.
பின்னர் டோல் பிளாசா முன்பு சுங்க வரியை ரத்து செய்ய கோரியும், மத்திய அரசை கண்டித்தும், மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, துணை பொதுச்செயலாளர் சலீமுல்லாகான், மாவட்ட செயலாளர்கள் ஜாமியா ராவுத்தர், பஜிருதீன்,சதக்கதுல்லா ,மாவட்ட துணை செயலாளர் சாதிக்பாட்ஷா உட்பட பலர் கண்டன உரை ஆற்றினர்.
கடலூர் ,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.