/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையம் கலெக்டர் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையம் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 24, 2024 01:01 AM

விழுப்புரம் : விழுப்புரம் லோக்சபா தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.
இதையடுத்து ஓட்டு எண்ணும் மையமான விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்தில் இருந்து சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'இங்கு கண்காணிப்பு பணிகளில் சுழற்சி முறையில் மத்திய காவல் படையினர் மற்றும் போலீசார் மூன்று குழுக்களாக பணிபுரிகின்றனர். ஒவ்வொரு நாளும் கண்காணிப்பு பணிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.
பாதுகாப்பு பணிகளின் போது போலீசார் விழிப்போடு செயல்பட வேண்டும்.
கட்டாயம் வருகை பதிவேட்டில் தங்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

