ADDED : ஏப் 23, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம், : செண்டூரிலிருந்து திருப்பதிக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
செண்டூர் வரதராஜ பெருமாள் பஜனை குழுவினர் சார்பில் � தேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு, மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் ஆன்மிக பாத யாத்திரையை கோவில் வளாகத்தில் இருந்து துவங்கினர்.
இக்குழுவினர் செண்டூர், கூட்டேரிப்பட்டு, தீவனுார், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம் வழியாக திருப்பதி செல்கின்றனர்.

