/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
/
என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஏப் 25, 2024 10:57 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு என் கல்லூரி கனவு என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மண்டல உதவி இயக்குனர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி கல்வி அலுவலர் கலியவரதன் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கல்வித்துறை ஆய்வாளர் ராமதாஸ் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் வெங்கடேசன், இனியன் ஆகியோர் உயர்கல்வி குறித்த கானொளியோடு, உயர்கல்வி வாய்ப்பு குறித்த விவரங்களை விளக்கினர்.
வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டுனர் நாகலட்சுமி, மாணவர்கள் படித்து முடித்தபின் வேலைவாய்ப்பு பெறுவது சம்பந்தமான கருத்துகளை வழங்கினார். சென்னை தனியார் பயிற்சி மைய அலுவலர்கள், போட்டி தேர்வு பயிற்சிகள் குறித்து விளக்கினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் ஞானதேசிகமணி, அருண் ஆகியோர், அரசு பயிற்சி திட்டம் குறித்து பதிவு செய்தனர். குமார் நன்றி கூறினார். கவரை, சிங்கனூர், புளிச்சபள்ளம், கொந்தமூர், வழுதரெட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள், அந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துகொண்டனர்.

