/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாஜி அமைச்சருக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
/
மாஜி அமைச்சருக்கு மிரட்டல் போலீசார் விசாரணை
ADDED : ஏப் 04, 2024 12:33 AM
திண்டிவனம்: முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு மொபைல்போனில் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் மொபைல் போனுக்கு சில தினங்களுக்கு முன் 'வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதில், எனது ஊருக்கு முன்பு வந்து சென்றீர்கள். தற்போது மீண்டும் வந்தா தெரியும் என கூறப்பட்டிருந்தது. மேலும், மிரட்டல் வார்த்தைகளை டைப் செய்திருந்தார்.
இதுகுறித்து மாஜி அமைச்சரின் உதவியாளர் ராஜாராம் ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் வெள்ளிமேடுப்பேட்டை அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த நவநீதம் என்பது தெரிய வந்தது.
போலீசார் ஏதேநெமிலி கிராமத்திற்கு சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்து 10 நாட்களாவதும், குடும்ப பிரச்னையில் மன உளைச்சலில் இருந்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ரோஷணை போலீசார், ஆபாசமாக பேசுவது, மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நவநீதத்தை தேடி வருகின்றனர்.

