/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாணக்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
சாணக்யா பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 07, 2024 11:46 PM

செஞ்சி: பிளஸ் 2 தேர்வில் செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 119 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பானுப்பிரியா 600க்கு 577 மதிப்பெண், ஹரிணி, ஜபசந்தியா தலா 575, தாசின் 573 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்தனர்.
மேலும், 550 மதிப்பெண்ணுக்கு மேல் 44 பேர், 500க்கு மேல் 62 பேர், 450க்கு மேல் 11 பேர், 400க்கு மேல் 2 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கணனி அறிவியலில் 23 பேர், கணிதத்தில் 9 பேர், வணிகவியலில் 1 மாணவர் என 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
இதே போல் தமிழில் 7 மாணவர்கள் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 1 மாணவி 98, இயற்பியலில் 1 மாணவி 99, வேதியியலில் 1 மாணவி 99, உயிரியலில் 1 மாணவர் 99, பொருளியலில் 3 மாணவர்கள் 98, கணக்கியலில் 1 மாணவர் 98, வணிகவியல் கணிதத்தில் 1 மாணவி 91 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை சாணக்யா கல்வி நிறுவனத் தலைவர் தேவராஜ் கவுரவித்து பரிசு வழங்கினார்.
பள்ளி முதல்வர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.

