/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர்கள் விழுப்புரம் வந்தன
/
வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர்கள் விழுப்புரம் வந்தன
வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர்கள் விழுப்புரம் வந்தன
வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர்கள் விழுப்புரம் வந்தன
ADDED : ஏப் 08, 2024 06:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பொருத்துவதற்கான அச்சிட்ட பேலட் ஷீட்கள் வந்திறங்கியது.
விழுப்புரம் (தனி) தொகுதி தேர்தலுக்கான ஏற்பாடுகள், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நடந்து வருகிறது. தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சயேச்சை என 17 பேர் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நடத்துவதற்கான 2,356 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பேலட் யூனிட்டில் பொருத்த வேண்டிய வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர்கள், தேர்தல் துறை மூலம் சென்னையிலிருந்து நேற்று விழுப்புரம் வந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி முன்னிலையில் மாவட்ட கருவூல அலுவலக கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது.
ஓட்டுச்சாவடிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் தயாரான பிறகு, இந்த பேலட் பேப்பர்கள் 6 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பொருத்தப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் தமிழரசன், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

