/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவேகானந்தா கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
/
விவேகானந்தா கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 22, 2024 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே லட்சுமிபுரம் சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரம சுவாமி சத்தியபிரபானந்தாஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், 136 இளநிலை மாணவர்களுக்கும், 86 முதுகலை மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.
கல்லுாரி முதல்வர் கெஜலட்சுமி வரவேற்றார். விழாவில் பெற்றோர், ஜெயம் அறக்கட்டளை அறங்காவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

