sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

வேலூர்

/

கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி

/

கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி

கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி

கணவரை வழியனுப்ப வந்த மனைவி தலை துண்டாகி பலி


ADDED : ஆக 20, 2025 11:34 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்பாடி:காட்பாடியில், ராணுவ வீரரான கணவரை வழியனுப்ப வந்த மனைவி, ரயிலில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்தார்.

வேலுார் மாவட்டம், பொய்கை கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன், 36; இவரது மனைவி சிந்து, 32; விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த பிரபாகரன், விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பணிக்கு செல்ல, மனைவியுடன் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் சென்றார். 10:00 மணிக்கு, காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரபாகரன் ஏறினார். ரயில் மெதுவாக நகர துவங்கியது.

அப்போது, கணவரின் அடையாள அட்டை தன்னிடம் இருப்பதை தாமதமாக அறிந்த சிந்து, கணவரிடம் அதை கொடுக்க முயன்றார்; தவறி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் ஏறியதில் சிந்து, தலை துண்டாகி உயிரிழந்தார்.

இதை பார்த்த பிரபாகரன், உடனடியாக ரயிலை நிறுத்தச்செய்து கீழே இறங்கினார். தன் கண்ணெதிரே மனைவி தலை துண்டாகி இறந்ததை பார்த்து கதறி அழுதார்.






      Dinamalar
      Follow us