/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கனிமவள அதிகாரியை மிரட்டிய மேலும் மூவர் சுற்றிவளைப்பு
/
கனிமவள அதிகாரியை மிரட்டிய மேலும் மூவர் சுற்றிவளைப்பு
கனிமவள அதிகாரியை மிரட்டிய மேலும் மூவர் சுற்றிவளைப்பு
கனிமவள அதிகாரியை மிரட்டிய மேலும் மூவர் சுற்றிவளைப்பு
ADDED : ஏப் 28, 2025 12:14 AM
சத்துவாச்சாரி; மணல் கடத்தலை தடுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் சத்துவாச்சாரி பகுதிகளில், இரவில் வாகனங்களில் மணல் கடத்துவதாக, வேலுார் மாவட்ட கனிமவள மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வேலுார் உதவி புவியியலாளர் பிரவீன்குமார், ஏப்., 25 நள்ளிரவில், அலமேலுமங்காபுரம், பெருமுகை, வசூர் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டார். புதுவசூர் பாலாற்று பகுதியில் சிலர், வாகனங்களில் மணலை கடத்தி சென்றது தெரிந்தது. அவர்களை தடுத்தபோது, வாகனத்தை நிறுத்தாமல், பிரவீன்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
அவரது புகார் படி, வேலுார் சத்துவாச்சாரி போலீசார், அலமேலுமங்காபுரம் ஏரியூரை சேர்ந்த பெருமாள், 33, என்பவரை இரு நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில், வெங்கடேசன், 30, கார்த்திக், 28, விக்னேஷ், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

