/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஏரிகளுக்கு நீர் திறந்து விட பாலாற்றில் போராட்டம்
/
ஏரிகளுக்கு நீர் திறந்து விட பாலாற்றில் போராட்டம்
ADDED : டிச 11, 2024 02:11 AM

வேலுார்:வேலுார் மாவட்டம், விரிஞ்சிபுரம் பகுதி பாலாற்றில் இறங்கி, பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, இயக்கத்தின் தலைவர் மார்த்தாண்டன் தலைமை வகித்தார். அப்போது, சதுப்பேரி, கடப்பேரி உள்ளிட்ட பல ஏரிகளுக்கு மழை காலங்களில் பாலாற்றில் வரும் நீர் திறந்து விடப்படும்.
ஆனால், கால்வாய்கள் துார்வாரப்படாமல், மேடாக உள்ளதாலும், தடுப்பணையில் நீரை தடுக்கும் தடுப்பு சுவர்கள் சிதைந்து போனதாலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்கள் குறுக்கே இருப்பதாலும், பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் வந்தும், ஏரிகளுக்கு நீர் செல்ல வழியில்லை.
இதனால், அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பாலாற்றில் வரும் நீரை, ஏரிகளுக்கு செல்ல, கால்வாயை துார்வாரி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

