/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு
/
வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு
வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு
வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 14, 2025 02:33 AM
வேலுார்: தேசிய சட்ட பணிகள் ஆணை குழு மற்றும் வேலுார் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் கூறுகையில், ''வேலுார் மாவட்டத்தில், 24,760 வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், 13,000 வழக்குகள் சமரசம் மூலம் தீர்வு காணக்கூடிய வழக்குகள்.
' 'குற்றவியல் வழக்குகளிலும், சில வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு காணலாம். சந்தேகங்களுக்கு, 15100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
வேலுார், மூஞ்சுர்ப்பட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை எஸ்.ஐ., கருணாகரன், 55, என்பவர், 2021ல் சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனார்.
அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாயை யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நேற்று லோக் அதாலத் கோர்ட் உத்தரவிட்டது. இதேபோல பல்வேறு வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.