ADDED : ஆக 29, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: தென்னை மரம் வெட்டியபோது, அறுந்து விழுந்த மின்கம்பியால் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி குமார், 40. இவரது மகள் நவ்யா, 5.
இவரது வீட்டின் அருகே அத்திராமுலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தை நேற்று வெட்டியபோது, மரம் சாய்ந்து அருகிலுள்ள மின்கம்பத்தின் மீது விழுந்தது.
இதில், அறுந்த மின்கம்பி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த நவ்யா மீது விழுந்ததில் சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.