/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை
/
போலீசாரை தாக்கிய தந்தை கைது; மகன்களுக்கு வலை
ADDED : நவ 08, 2024 02:47 AM
பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த, மேல்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தனிப்படையினர் கீழ்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில், மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 55, என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அங்கு வந்த வெங்கடேசனின் மகன்களான சந்தோஷ் மற்றும் குமார், போலீசாருடன் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். கைது செய்ய முயன்றபோது இருவரும், தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு, தந்தையுடன் தப்பினர்.
தனிப்படை போலீசார் புகாரின்படி, பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வெங்கடேசனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான அவரது மகன்களை தேடி வருகின்றனர்.

