/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுாரில் சித்திரை திருவிழா 8 பூப்பல்லக்குகள் ஊர்வலம்
/
வேலுாரில் சித்திரை திருவிழா 8 பூப்பல்லக்குகள் ஊர்வலம்
வேலுாரில் சித்திரை திருவிழா 8 பூப்பல்லக்குகள் ஊர்வலம்
வேலுாரில் சித்திரை திருவிழா 8 பூப்பல்லக்குகள் ஊர்வலம்
ADDED : ஏப் 24, 2024 09:17 PM
வேலுார்:வேலுாரில் நடந்த சித்திரை திருவிழாவில், எட்டு பூப்பல்லக்குகள் பவனி வந்தன. இதில், ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர்.
வேலுாரில் சித்திரை திருவிழா, பவுர்ணமி தினத்தன்று ஆண்டுதோறும் விமர்சையாக நடக்கும். அதன்படி நேற்று முன்தினம் இரவு, சித்ரா பவுர்ணமி பூ பல்லக்கு விழா நடந்தது.
ஜலகண்டீஸ்வரர் கோவில், செல்வ விநாயகர், தாரகேஸ்வரர், விஷ்ணு துர்கை, பெருமாள் கோவில், கனகதுர்கை அம்மன், வேம்புலி அம்மன், லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்களின் பூப் பல்லக்கு என, எட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.
அதில், அலங்கரிக்கப்பட்ட சுவாமியுடன், வண்ண விளக்கு, வானவேடிக்கையுடன் நகரின் மண்டி வீதி, லாங்கு பஜார், கம்சரி பஜார், பில்டர் பெட் சாலை, அண்ணாசாலை வழியாக கோட்டை வெளிசாலையில் ஊர்வலம் வந்தது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

