/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி
/
இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் வாலிபர் பலி
ADDED : ஏப் 12, 2025 02:38 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அசோக்ராஜ் என்பவரின் தாய் ராஜமணி, வயது மூப்பு காரணமாக நேற்று இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்ற போது, இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்தனர். அது வெடித்து சிதறியதில், ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு, ஸ்ரீதர், 21, என்பவர் இறந்தார்.
மேலும், திருச்சி அரசு மருத்துவமனையிலும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து உப்பிலிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

