/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இடப்பிரச்னையில் கொலை 2 சகோதரர்களுக்கு 'ஆயுள்'
/
இடப்பிரச்னையில் கொலை 2 சகோதரர்களுக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 24, 2025 12:21 AM
திருச்சி:திருச்சி அருகே இடப்பிரச்னையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சகோதரர்களுக்கு, ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், அரசலுாரைச் சேர்ந்தவர் லுார்து வசந்தன். இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த விஜயராகவன் குடும்பத்துக்கும் இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு, லுார்து வசந்தன் சகோதரர் விமல்லாரன்ஸ், 24, என்பவரை, விஜயராகவன் குடும்பத்தார் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கில் விஜயராகவன், 37, அவரது சகோதரர் வசந்தகுமார், 49, தாய் வளர்மதி, 63, ஆகியோர் தொட்டியம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் விசாரித்து, விஜயராகவன், வசந்தகுமார் ஆகியோருக்கு, ஆயுள்தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார். இவர்களின் தாய் வளர்மதி விடுவிக்கப்பட்டார்.

