/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
குப்பை வண்டியில் கட்சி கொடிகள் அ.தி.மு.க., மறியல்
/
குப்பை வண்டியில் கட்சி கொடிகள் அ.தி.மு.க., மறியல்
ADDED : ஆக 23, 2025 07:33 PM

திருச்சி:அ.தி.மு.க., கொடிகளை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்ற மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திருச்சியில் அ.தி.மு.க.,வினர் மறியல் செய்தனர்.
திருச்சியில், இரண்டாம் கட்டமாக, மூன்று நாட்கள் பிரசாரப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று, விமானத்தில் திருச்சி வந்தார்.
கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கிய அவரை வரவேற்பதற்காக, மாநகர பகுதியில், அ.தி.மு.க.,வினர் நட்டு வைத்திருந்த கொடிகள், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி, மாநகராட்சியினர் பறிமுதல் செய்தனர்.
அந்த கட்சி கொடிகளை, குப்பை வண்டியில் வைத்து கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் நிறுத்தி இருந்தனர்.
இதைப்பார்த்து கொதிப்படைந்த அ.தி.மு.க.,வினர், கட்சி கொடிகளை குப்பை வண்டிகளில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், அவர்களை சமாதானப் படுத்தி கலைத்தனர்.