ADDED : நவ 08, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், சேவூரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 26. செய்யாறை அடுத்த குண்டியாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி, 21. இருவருக்கும் அக்., 21ல் திருமணமானது. தலை தீபாவளியை கொண்டாட கணவருடன், பெற்றோர் வீட்டுக்கு சுவாதி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது டி - ஷர்ட் அணிந்திருந்தார்.
இதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், வெளியே சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் துாக்கிட்ட நிலையில் சுவாதி கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

