/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்
/
பள்ளி பஸ்கள் மோதல் 23 மாணவர்கள் காயம்
ADDED : ஆக 29, 2025 05:45 AM
ஆரணி: இரு பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், 23 மாணவர்கள் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மா வட்டம், ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் விகாஷ் வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளியில், தச்சூர், நெசல், கேளூர், ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
வழக்கம்போல் நேற்று காலை, மாணவர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு டிரைவர் சீனிவாசபுரம் கூட்ரோடு, ஆரணி - தேவிகாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வேகத்தடை இருந்ததை கவனிக்காத பஸ் டிரைவர், திடீரென பிரேக் போட்ட நிலையில், பின்னால் வந்து கொண்டிருந்த அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 23 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆரணி தாலுகா போலீசார் தப்பியோடிய பஸ் டிரைவர் முபாரக், தணிகைவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.