/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற... தொழிலாளர் தயார்! வட மாநில தொழிலாளரும் ஆர்வம்
/
தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற... தொழிலாளர் தயார்! வட மாநில தொழிலாளரும் ஆர்வம்
தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற... தொழிலாளர் தயார்! வட மாநில தொழிலாளரும் ஆர்வம்
தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற... தொழிலாளர் தயார்! வட மாநில தொழிலாளரும் ஆர்வம்
ADDED : ஏப் 16, 2024 11:57 PM
திருப்பூர்;திருப்பூரில் இருக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு
மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஜனநாயக கடமையாற்ற தயாராகி வருகின்றனர்.
திருப்பூர் பனியன் தொழிலில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல், தேர்தல்களுக்கும், சொந்த ஊர் செல்வது வழக்கம்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை, தினமும் கேட்டறிந்து வருகின்றனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும், சொந்த தொகுதிகளிலும் வாக்காளராக உள்ளனர். வேட்பாளரை பொறுத்து, ஓட்டளிக்க சொந்த ஊர் செல்லலாமா? திருப்பூரில் ஓட்டளிக்கமா என்று முடிவு செய்வது வழக்கம்
பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது. சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, பஸ்களுக்கு புக்கிங் செய்து காத்திருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால், திருப்பூரில் ஓட்டளித்துவிட்டு, சொந்த ஊருக்கு செல்லலாம் என, வெளிமாவட்ட தொழிலாளர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 19ம் தேதி, விரைவாக ஓட்டளித்துவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் காரணமாக, தொழிலாளர் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக, பின்னலாடை உற்பத்தியும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அடுத்த கட்டமாக, வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.
திருப்பூரில் மட்டும், 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர்; இவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க, கட்டாயம் சொந்த மாநிலங்களுக்கு செல்லப்போகின்றனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில், வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

