/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்வளத்துறையில் பணியிடங்களை நிரப்பாமல்...நல்லாறு மீட்பு என்பது வெறும் கையில் முழம் போடுவதற்கு சமம்!
/
நீர்வளத்துறையில் பணியிடங்களை நிரப்பாமல்...நல்லாறு மீட்பு என்பது வெறும் கையில் முழம் போடுவதற்கு சமம்!
நீர்வளத்துறையில் பணியிடங்களை நிரப்பாமல்...நல்லாறு மீட்பு என்பது வெறும் கையில் முழம் போடுவதற்கு சமம்!
நீர்வளத்துறையில் பணியிடங்களை நிரப்பாமல்...நல்லாறு மீட்பு என்பது வெறும் கையில் முழம் போடுவதற்கு சமம்!
ADDED : நவ 27, 2025 05:16 AM

பழமையும் தொன்மையும் நிறைந்த கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான அவிநாசியை மையப்படுத்தி பாயும் நல்லலாற்றின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்தனர்.
இவையெல்லாம் நடந்தேற வேண்டுமானால் நீர்வளத்துறை உயிரோட்டமாய் இருக்க வேண்டும்.
ஆனால் திருப்பூரை பொறுத்தவரை, நீர்வளத் துறையில் அலுவலர் பற்றாக்குறை என்பது மிக அதிகம் என்றும், நல்லாற்றின் நலன் சார்ந்து மட்டும் இப்பிரச்னையை பார்க்காமல், ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான பிரச்சனையாக பார்ப்பதே உகந்தது என்றும் ஆதங்கப்படுகின்றனர் நீர்வளத்துறையினர்.
மாவட்ட வாரியாக, நீர்வளத்துறையில் உதவி பொறியாளர் பணியிடங்களும், களப்பணியாற்றும் வகையில் ஆய்வாளர், பாசன உதவியாளர், 'லஸ்கர்' எனப்படும் கரை காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வயது மூப்பு காரணமாக பணி ஓய்வு, பணியின் போது இறப்பு உள்ளிட்ட பல காரணங்களால், ஏராளமான பணியிடங்கள் காலியாகி வருகின்றன. இதனால் அவர்களின் அன்றாட பணிகளை கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.
'களத்தில் சென்று பணியாற்றுகிறோமோ இல்லையோ, மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்றாடம் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருக்கிறது,' எனவும் புலம்புகின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.
காகித அளவில் கோர்ட் உத்தரவு 'ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்,' என, ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்பணிகளை செய்து முடிக்க போதிய பணியாளர்கள் உள்ளனரா என்பதே கேள்வி.
தற்போது, போட்டி தேர்வு வாயிலாக, 150க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
நீர்நிலை புறம்போக்குகளை அடையாளம் காண்பது, ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பணி ஆய்வாளர்கள் கவனிக்கின்றனர். ஆனால், தேவைக்கேற்ப அப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
களப்பணியில் தொய்வு நிலை நீர்நிலையில் உள்ள மதகுகளை திறந்து விடுவது, பலவீனப்பட்டுள்ள கரைகளை கண்காணித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை பாசன உதவியாளர்கள் மற்றும் கரை காவலர்கள் மேற்கொள்கின்றனர்.
இப்பணிகளை மேற்கொள்ளவும் போதிளவு பணியாளர்கள் இல்லை. உதவி பொறியாளர் பணியிடங்கள் தேவைக்கேற்ப உள்ள நிலையில், 80 சதவீதம் அளவுக்கு களப்பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நீர்நிலை மேம்பாடு புனரமைப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து, அரசுத் திட்டங்களை தங்களுக்கு கீழ பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடும் நிலையிலும், மேற்பார்வை செய்யும் நிலையிலும் உள்ளள அதிகாரிகள் மட்டத்திலானன பணியிடங்ள் போதிய அளவு நிரப்பப் படுகின்றன.
ஆனால், களத்தில் இறங்கி அப்பணிகளை செய்வதற்கு தான் ஆட்கள் இல்லை. இதனால், 'நீர்வளத்துறை சார்ந்த பணிகள் பாதிக்கின்றன' என, துறை சார்ந்தவர்களே கூறுகின்றனர்.
எனவே, நீர்நிலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப அலுவலர் பணியாளர் பணியிடங்களை நிரப்பி, பாரபட்சமின்றி நீர்நிலை மீட்டெடுப்பு பணிகளில் கவனம் செலுத்தினால், உருக்குலைந்து கிடக்கும் நல்லாறு போன்ற நீர் நிலைகளை ஓரளவாவது மீட்டெடுக்க முடியும்.இல்லையேல், நல்லாறு உட்பட நதிகள் மீட்பு என்பது வெறும் கையில் முழம் போடுவதற்கு சமமானதே.
நாளை...
நல்லாறு நல்ல ஆறாக
மாறி என்ன செய்யலாம்?

