/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்வாரிய அலுவலகங்களில் 'இ-ஸ்டாம்ப்' திட்டம் வருமா?
/
மின்வாரிய அலுவலகங்களில் 'இ-ஸ்டாம்ப்' திட்டம் வருமா?
மின்வாரிய அலுவலகங்களில் 'இ-ஸ்டாம்ப்' திட்டம் வருமா?
மின்வாரிய அலுவலகங்களில் 'இ-ஸ்டாம்ப்' திட்டம் வருமா?
ADDED : டிச 18, 2025 08:00 AM
திருப்பூர்: திருப்பூர் மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும், 'இ-ஸ்டாம்ப்' திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நேற்று, குமார் நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. செயற்பொறியாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள், மின் பொறியாளர்கள் பங்கேற்றனர். மின்நுகர்வோர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்தனர்.
கூட்டத்தில், தமிழக அரசின் 'இ-ஸ்டாம்ப்' முறையை, மின்வாரிய அலுவலகங்களில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனுவில், 'தமிழக அரசு, 'இ-ஸ்டாம்ப்' என்ற முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மின்வாரியத்தில், அதனை ஏற்க மறுக்கின்றனர். திருப்பூர் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில், 'இ-ஸ்டாம்ப்' பேப்பரை ஏற்க மறுத்து, முத்திரை தீர்வை செலுத்தும் அரசின் காகிதமில்லா திட்டத்தை முடக்க நினைக்கின்றனர்.
அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், 'இ-ஸ்டாம்ப்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தற்காலிக மின் இணைப்பு, பெயர் மாற்றம், மின்கம்பம் மாற்றம் என, பல்வேறு தேவைகளுக்கு, 200, 500 ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, 'இ-ஸ்டாம்ப்' திட்டத்தை செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

