ADDED : டிச 17, 2025 06:47 AM
திருப்பூர்: ''தமிழக கழிவு மேலாண்மை மன்றம், கழிவு மேலாண்மை தொடர்பான வழிகாட்டுதலை வழங்குகிறது,'' என, தமிழக கழிவு மேலாண்மை மன்ற செயலாளர் வீரபத்மன் தெரிவித்தார்.
இது குறித்து அவரது அறிக்கை:;
தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றம் என்பது, கழிவு மேலாண்மைக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளில், இல வசமாக கழிவு மேலாண்மை பயிற்சி வழங்கி வருகிறோம். அனைத்து வித கழிவுகளுக்கும், மறு சுழற்சி செய்ய உறுதியான திட்டத்துடன், செயல் வடிவம் கொடுத்து வருகிறோம்.
திடக்கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொள்வது குறித்த, யோசனை, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். இப்பணியை மேற்கொள்ள தனியார் அமைப்பினர் பலரும் முன்வருகின்றனர் என்பதையும் எங்கள் விழிப்புணர்வு பயிற்சியின் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறோம்.
எவ்வித லாப நோக்குமின்றி, சேவை அடிப்படையில் தான் இப்பணிகளை செய்து வருகிறோம். இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தமிழக அரசுடனும், உள்ளாட்சி நிர்வாகத்தினருடனும் இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.

