/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் குத்தகை நிலத்தில் விதிமீறல்
/
கோவில் குத்தகை நிலத்தில் விதிமீறல்
ADDED : ஆக 23, 2025 12:25 AM
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, வருவாய் பெறப்படுகிறது. குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது சட்ட விரோதம்.
குத்தகைதாரர்கள், நிலத்தில் விவசாயம் மட்டும் செய்ய வேண்டும். கோவில் சொத்துக்களான மரங்களை வெட்டவோ, விற்கவோ கூடாது.
சிவன்மலை கிரிவல பாதையில், மூன்று ஏக்கர் நிலம், மூன்று ஆண்டுகளுக்கு, 9,500 ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இடத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பதற்காக, மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் உள்ள மரங்களையும் அத்துடன் வெட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிமுறைகளை மீறி, மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.