ADDED : டிச 24, 2025 07:18 AM
திருப்பூர்: திருப்பூர் அருகே நடந்த இருவேறு விபத்தில், இருவர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பூர் அருகேயுள்ள மங்கலம் - சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 23. இவர் நேற்று முன்தினம் டூவீலரில், திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆண்டிபாளையம் அருகே, எதிரே வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
காங்கயம், சிவன்மலையை சேர்ந்தவர் சின்னபட்டான், 55. உடல் நலம் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், சிவன்மலை ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்திருந்தார். அப்போது ரோட்டின் எதிரில், ஹேண்ட் பிரேக் போடால் நிறத்தயிருந்த கார், திடீரென நகர்ந்து சின்னபட்டான் மீது மோதியது. அருகிலிருந்தோர் அவரை மீட்டு காங்கயம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

