/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் முறிந்து விழுந்து சுற்றுச்சுவர் சேதம்
/
மரம் முறிந்து விழுந்து சுற்றுச்சுவர் சேதம்
ADDED : நவ 27, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறப்புவிழா செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அலுவலகத்துக்கு முன்இருந்த வேப்பமரம் ஒன்று, நேற்று மாலை திடீரென முறிந்து விழுந்தது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலக சுற்றுச்சுவரின் மீது விழுந்ததால், ஒரு பகுதி உடைந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

