/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2025 05:03 AM

உடுமலை: உடுமலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
மத்திய அரசு, 44 தொழிலாளர்கள் சட்டங்களை 4 சட்ட தொகுப்பாக மாற்றியதை திரும்ப பெற வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.