/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிரின் தாக்கம் அதிகரிப்பு: தக்காளி விலை 'கிடுகிடு'
/
குளிரின் தாக்கம் அதிகரிப்பு: தக்காளி விலை 'கிடுகிடு'
குளிரின் தாக்கம் அதிகரிப்பு: தக்காளி விலை 'கிடுகிடு'
குளிரின் தாக்கம் அதிகரிப்பு: தக்காளி விலை 'கிடுகிடு'
UPDATED : டிச 23, 2025 08:04 AM
ADDED : டிச 23, 2025 07:44 AM

திருப்பூர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, வழக்கமாக, 25 - 28 டன் மற்றும் வடக்கு சந்தைக்கு, 2.5 டன் தக்காளி வரும். கடந்த பத்து நாட்களாக குளிரின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தக்காளி வரத்து குறைந்துள்ளது. நேற்று தெற்குக்கு, 22 டன்னும், வடக்குக்கு, 1.5 டன்னும் தக்காளி விற்பனைக்கு வந்தது. மூன்று முதல் ஐந்து டன் அளவுக்கு வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ, 35 - 40 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று எட்டு முதல் பத்து ரூபாய் உயர்ந்து, 45 - 50 ரூபாய்க்கு விற்றது. சந்தையில், மொத்த விற்பனையில் விலை உயர்ந்ததால், காய்கறி, மளிகை கடைகளிலும் தக்காளி விலை திடீரென நேற்று உயர்த்தப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், 'இதுவரை இல்லாத அளவு கடும் பனி நிலவுகிறது. மாலை துவங்கி விடிய விடிய அதிகாலை வரை பனி அதிகமாக இருப்பதால் செடிகளில் பூ எடுப்பது, தக்காளி பெரிதாவது சற்று தாமதமாகியுள்ளது. கடந்த மூன்று மாதமாக தக்காளி விலை குறைவு என்பதால், மூன்றில் ஒரு பாக விவசாயிகள் தக்காளி பயிரிடவில்லை. வரத்து ஒரே நேரத்தில் குறைந்து விட்டது. மார்கழி மாதம் விற்பனை கொஞ்சம் அதிகம் என்பதால், விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்தால், விலை குறைந்து விடும்,' என்றனர்.

