ADDED : டிச 11, 2024 05:02 AM
n ஆன்மிகம் n
முதலாம் ஆண்டு விழா
ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர். விநாயகர் பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை - காலை, 9:35 மணி, 54 வகையான திரவிய ஹோமம், மஹா பூர்ணாகுதி - காலை, 10:35 மணி. 108 சங்காபிஷேகம் - காலை, 11:00 மணி. சிறப்பு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம், 12:35 மணி.
மூன்றாம் ஆண்டு விழா
ஸ்ரீ முத்து விநாயகர் கோவில், முத்து நகர், திருப்பூர். லட்சார்ச்சனை ஆரம்பம் - காலை, 7:15 மணி. இரண்டாம் கால யாக பூஜை - காலை, 8:30 மணி. 108 சங்காபிஷேகம், தீபாராதனை - மதியம், 1:30 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை, 6:30 மணி.
மண்டல பூஜை விழா
65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி. அவனருளாலே எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 6:45 மணி. சொற்பொழிவாளர் வருணனி திருசெந்திலன்.
பகவத் கீதை தொடர்சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
n பொது n
ஆர்ப்பாட்டம்
வரி உயர்வை கண்டித்து காங்., கட்சி ஆர்ப்பாட்டம், நல்லுார் மண்டல அலுவலகம் அருகில், காங்கயம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: மாநகராட்சி காங்., கவுன்சிலர் விஜயலட்சுமி. காலை, 10:00 மணி.
வியாபாரிகள் சங்கஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசை கண்டித்து, அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநக ராட்சி அலுவலகம் முன், திருப்பூர். காலை,10:30 மணி.
பயிலரங்கம்
உணவு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு பயிலரங்கம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10 முதல் மாலை, 5:00 மணி வரை.
பொருட்காட்சி
கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரை.

