ADDED : டிச 24, 2025 06:17 AM
n ஆன்மிகம் n 108 திருவிளக்கு பூஜை 17ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை. விநாயகர் கோவில், ஜெ.ஜெ.நகர், ராமபுரம், வீரபாண்டி, திருப்பூர். ஸ்ரீ ஹரிஹரசுதன் அய்யப்ப பக்தர்கள் குழு மற்றும் பொதுமக்கள். மகா கணபதி ஹோமம் - அதிகாலை 5:00 மணி. சக்தி கலசம் அழைத்தல் - காலை 10:00 மணி. 108 திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். புஷ்பாபிேஷகம் - மாலை6:45 மணி.
சிறப்பு பயிற்சி சிவாலய சைவாகம பூஜாக்ரம பயிற்சி முகாம், ஸ்ரீ வாகீசர் மடாலயம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: பெங்களூரு, ஸ்ரீஸ்ரீ வேத ஆகம ஆய்வு நிறுவனம். மாத பூஜா விதிகள் பாகம் 1 - காலை 10:00 முதல் 12:30 மணி வரை. மாத பூஜா விதிகள் பாகம் 2 - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை.
ஐந்தாம் ஆண்டு பெருவிழா 'விஸ்வேஸ்வரரும் வீரராகவரும் உவந்திடும் மதிநிறை மார்கழி நிருத்ய கான உற்சவம் 2025', ஐந்தாம் ஆண்டு பெருவிழா. ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ கலாவிருக் ஷா நிருத்ய கான சபா, திருப்பூர். கர்நாடக குரலிசை, பரதநாட்டியம் - மாலை 5:30 முதல் 8:00 மணி வரை.
மார்கழி கலை விழா சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் ஸ்ரீ வைகுண்ட மார்கழி மஹோத்சவம் 2025, விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். குரலிசை, பரதநாட்டியம் - மாலை 5:00 முதல் 7:00 மணி வரை.
சிறப்பு நிகழ்ச்சி மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் ஆன்மிக மையம், பி.என்.ரோடு, திருப்பூர். ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, காந்திநகர் மற்றும் இடுவாய். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள். ஓம்காரம் சுப்ரபாதம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி - அதிகாலை 5:00 மணி. நகர சங்கீர்த்தனம் - 5:30 மணி. மங்கள ஆரத்தி - 6:15 மணி. வேத பாராயணம் - 6:30 மணி.
கம்பராமாயணம் சொற்பொழிவு ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் 'உஞ்சவிருத்தி' - காலை 7:00 முதல் 8:00 மணி வரை. திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு - மாலை 6:30 மணி.
மார்கழி பாராயணம் திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - வீரராகவ பெருமாள் கோவில். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம். அதிகாலை 5:00 மணி.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா டி.இ.எல்.சி. சர்ச், திருப்பூர். மாலை 6:30 மணி.
பகவத்கீதை சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.
n பொது n பாராட்டு விழா பதக்கம் வென்றவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா. கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளி, ெஷரீப் காலனி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் தடகள சங்கம். மாலை 5:00 மணி.
விழிப்புணர்வு ஊர்வலம் தமிழ் ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 9:30 மணி.
மலரஞ்சலி 38வது எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில் மலரஞ்சலி. குமரன் சிலை, திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க. காலை 9:30 மணி.
பரிசளிப்பு விழா பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கான ஹாக்கி போட்டி பரிசளிப்பு விழா. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: உடற்கல்வித்துறை. மாலை 5:00 மணி.

